Friday 31 October 2014

கண்ணம்மாவின் காதலன்


கண்ணம்மாவின் காதலன்


தீர்த்த கரையினிலே .....

மகாகவி பாரதியின் இந்த பாடலை இதற்கு முன்பு எத்தனையோ முறை படித்திருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்..(MSV / SPB GREAT COMBO version ) ஒவ்வொரு முறை,ஒவ்வொரு காலகட்டத்தில் படிக்கும் போதும் புதுப்புது அனுபவங்கள்..

வெறும் வார்த்தை விளையாட்டுகளிலும்..எதுகை மோனைகளிலும் ..மட்டுமின்றி காதலையும் அதன் பிரிவாற்றாமையையும் எளிதாக புரிய செய்யும் ..நெற்றியடி பாடல் வகை இது ..

இந்த பாடலை கேட்டால் காதலிக்க விரும்புவீர்களோ இல்லையோ ,காதல் தோல்விக்கும். பிரிவு துயருக்கும் கட்டாயம் விரும்புவீர்கள்..

மகாகவி....காளிதாசனுக்கு பின் இந்த பட்டம் யாரையும் சேரவில்லை...

தாகூருக்கு நிகரான சமகால கவி..... தமிழகத்தில் பிறந்ததாலேயே உலக அங்கீகாரம் கிட்டவில்லை ..

நாடி ,நரம்பு , இரத்தம் , தசை எல்லாம் ...காதல் கசிந்துருகினால் மட்டுமே இப்படி காதலையும் , பிரிவாற்றாமை ..எழுத முடியும்...

அதனை விட பிரிவு துயரின் உள் மன மாற்றங்களையும் ...தன் உணர்வு மாறாமல் கவிதையின் அழகு குறையாமலும் வரிக்கு வரி வெளிப்படுத்தியதில் பாரதியார் மஹாகவியாக உயர்ந்து நிற்கிறார் ...

பின் குறிப்பு... இது பாரதியின் "தீர்த்த கரையினிலே ..பாடலின் சிறு பகுதியின் உளவியல் பகுப்பாய்வு முயற்சி மட்டுமே...

இந்த இடத்தில் ஒரு சிறிய உளவியல் விளக்கம்...நம்முடைய நவீன உளவியல் அறிவியல் சொல்வதை பாப்போம்..

பெரியவர்களின் காதல் பிரிவின் இயங்குவியல் (separation dynamics theory) BOWLBY உருவாக்கிய குழந்தைகளுக்கான இணைப்பு கோட்பாடுகளை(attachment theory ) ஒட்டியே உருவாக்கப்பட்டது ....

ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ஒரு தாய் தன குழந்தையை அடிக்கும் போது அக்குழந்தை மிரண்டு அழுது ..பயந்து மீண்டும் தன் தாயிடமே அணைப்பை எதிர் பார்க்கும்...அம்மாவையே கட்டி அணைத்து கொள்ளும்..இதை அனைவரும் கவனித்திருப்போம் ....

இதே dynamics ஐ பெரியவர்களின் காதல் மற்றும் குடும்ப உறவு முறை களிலும் உள்ளதாக உளவியல் சொல்கிறது

..எப்பொழுதெல்லாம் எதிர்பார்ப்புகள் உள்ள இரு இணைகளுக்கிடையே (pair ) பதற்றம் (anxiety ) உண்டுபண்ணும் செயல்கள் ..நடக்கிறதோ , அது சிறு சண்டையிலிருந்து..உடல்நலமின்மையிலிருந்து ,காதல் பிரிவிலிருந்து, உதாசீனம் மற்றும் சந்தேகம் வரை எது நடந்தாலும் நாம் நம் மனதிற்கு பிடித்தவர்களை உள்ளம் மற்றும் உடல் ரீதியாக நெருங்கியிருக்கு முயல்கிறோம் ..

இந்த நெருக்கம் நிறைவடையும் போது நம் பதற்றம் குறையும் ..இல்லையேல் அது அதீத பதற்றதிலோ ,மனசோர்வில் , மற்றும் விரக்தியிலோ ..வேறு மன/ உறவு சிக்கல்களிலோ முடியும்...

இனி பாடல்.......

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி..
பாவை தெரியுதடி .......

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ

இனி பாடலும்.. அடைப்பு குறிக்குள் அதன் ஈடான உளவியல் பரிமாற்றங்களும் ....

1

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கி(associate)யோடென்று சொன்னாய்(expectations)
வார்த்தை தவறிவிட்டாய்(expressing dejection / rejection )
அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி (palpitation )
பார்த்த இடத்திலெல்லாம்.. உன்னைப் போலவே பாவை தெரியுதடி(obsession )

[(romantic obsessions ---can be experienced during the passion phase of love .... இது தன்னியல்பாக வரும்..தவிர்கமுடியாத உங்கள் காதலுக்குரியவரை பற்றிய எண்ண சுழற்சியும்(obsessions ) ... மற்றும் உணர்வுகளின் கூட்டாட்டமும் அதனை தொடர்ந்து வரும் பாலியல் ஈர்ப்பும்(sexual attraction )]

2

மேனி கொதிக்குதடி(hot flush --experienced due to increased nor adrenaline ) தலை சுற்றியே ( dizzy --anxiety)
வேதனை( feeling pain --depressive symptom ) செய்குதடி ..
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் (longing for closeness -to alleviate anxiety)
மோனத்திருக்குதடி(calmness ) இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே (comfort of sleep)
நானொருவன் மட்டிலும்(expressing loneliness) பிரிவென்பதோர் (separation) நரகத் துழலுவதோ (despair& extreme alienation )

நானொருவன்...2

தீர்த்த ....

STARTING from LOVE > expectations > feel of rejection > dejection > ANXIETY > romantic OBSESSIONS > loneliness >despair & alienation >DEPRESSION >longing for closeness >CALMNESS ..

இதன் மூலம் காதல் உணர்வுகளின் வெளிபாட்டை பதற்றம் முதல் விரக்தி வரை வெளிபடுத்தியன் மூலம் பாரதியார் .... மகா(காதல்)கவி தானே.....

இதற்க்கு மேல் காதலையும் பிரிவையும் அதன் நுண்ணிய உணர்வுகளையும் ,விளைவுகளையும் அதன் தீர்வுகளையும் ஒரே பாட்டில் ..எந்த கவியாலும் சொல்ல முடியாது..

கற்பனையை எழுதுவது வேறு ..தன்னுள் நிகழ்வதை தானே அனுபவித்து எழுதுவது வேறு..மகாகவி இந்த ஒரு பதம் மட்டும் போதாது....பாரதி !!! உம்மை புகழ ...

கொடுத்து வைத்த கண்ணம்மா ....இந்த அமர கவியை காதலனாக பெற்றதற்காக ...

கோடான கோடி நன்றிகள் ..உமக்கு ....இந்த கவிதை கிடைக்க செய்தமைக்கு ...

(உங்கள் MIND VOICE ..பாட்டை பாட்டாக பார்க்காம ஏன் இந்த கோல வெறி ...REPLY ....என்னுள் இருக்கும் கவிதை காதலனுக்கும் ,அவனுள் இருக்கும் PSYCHIATRIST க்கும் எப்படி தீனி போடறது...)

-------------------------------- உள(ற)வுகள் தொடரும்..-------------------------- அன்பன்... DR.ம.ஸ்ரீதர் ,மனநரம்பியல் மருத்துவர் , ஆத்மா மனநல மற்றும் ஆராய்ச்சி நிலையம் , திருச்சி