Sunday 2 November 2014

இன்டெர்நெட். காதலி....

இன்டர்நெட் காதலி ......
சற்றே நீளமான பதிவு (எல்லா பதிவரையும்  போல )
                      தலைப்பை பார்த்த உடன் , ஏதோ ரஷ்ய நாவல்..போல பின் நவீனத்துவ கசமுசாக்கள் என்று நினைக்க வேண்டாம் 
                     ஆதம் ஏவாளுக்கெ  ஆதியில் வந்த உணர்வு  காதல்..தான் ,வெட்கம் மற்றும் கூச்சத்திற்க்கு முன்பே ..
அடிப்படையில் காதல் என்ற உணர்வு
intimacy(நெருக்கம் ) ,                                                                        passion(கட்டுகடங்காத ஆர்வம் )  ,                                                                       commitment (பொறுப்புணர்ச்சி /அர்பணிப்பு)...இவை மூன்றும் சேர்ந்தது ..
     intimacy ...சேர்ந்திருப்பது..மனதுக்கு நெருக்கமாக இருப்பது  மற்றும் ஒருமித்த  உணர்வுடன் இணைந்திருப்பது 
     passion ....இந்த நிலை முதல் நிலையை தொடர்ந்து வருவது...                    இது தன்னியல்பாக வரும்..தவிர்கமுடியாத                               உங்கள் காதலுக்குரியவரை  பற்றிய எண்ண சுழற்சியும்(obsessions ) ... மற்றும் உணர்வுகளின் கூட்டாட்டமும்                                  அதனை தொடர்ந்து வரும் பாலியல் ஈர்ப்பும்(sexual attraction )
   commitment ....ஒருவருக்கொருவர் ஒப்பு கொடுப்பது..பொறுப்பாய்   இருப்பது ...மற்றும் இது எதிர்காலத்தை                        
                        சார்ந்த  குழந்தை வளர்ப்பு ,போன்ற பங்கீட்டு நோக்கங்கள் கொண்டது..
                                                        *     *     *      *       *
இணையத்தை பொறுத்த 1980 மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டு ..90 கள் மத்தியில் பிரபலமாகி  ..2000 பிறகு தவிர்க்க முடியாதது ஆகி இன்று உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை  இணைய பயன்பாடாளர் எனில்..அதன் தாக்கத் தை புரிந்து கொள்ளலாம்  
தேவதையை கண்டேன் ... காதலில் விழுந்தேன் ..இவள் தான் என்று முடிவு செய்ய நாம் எடுத்துகொள்ளும் நேரம் 4 நிமிடங்களுக்கு குறைவு தான் ..ஒரு வகையில் எல்லா காதலும் ...கண்டதும் காதல் தான்..
சொல்லில் தெரிவது பாதி ...நெஞ்சில் மூடி கிடப்பது மீதி ...நீங்கள் மூடியே வைத்தாலும் ..உங்கள் உடல் மொழியும், குரல் தொனியுமே ...95  % காதலை சொல்லி விடுகின்றன ..மீதி  5 % தான் வார்த்தைக்கு வேலை ..இந்த 5% வேலைக்கு தான் நாம் ஆதி காலம் தொட்டே தூது விட்டு வந்துள்ளோம்  ...
கண் விடு தூது..காற்று விடு தூது...மேகம் விடு தூது...புறா ,கிளி  மயில்  விடு தூது ..போதாதென்று கடவுளையே தூது விட்டு களிப்படைந்தவர்கள் ...நாம் .
இந்த இனைய  நூற்றாண்டில் ...பெருகி வரும் இணைய மோகமும்...இணைய  மூலம் ..காதல் திருமணமும் ,விடலை காதலும், பின் தொடரும்..மண  சிக்கல்களும், விவாகரத்துகளும் ..தவிர்க்க முடியாதது  ஆகின்றது ...
இதனை புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இது....
போதை அடிமை படுத்தும்...காமம் அடிமை படுத்தும்..காதலும் அடிமை படுத்தும்.. இணையம் ,மற்றும் அதை சார்ந்த சமூக வலை தளங்கள் ...நம்மை அடிமை படுத்துமா?
அடிப்படையில் இந்த அடிமை செய்தல் என்பது யாரும் மை போட்டு செய்வதில்லை ...நாமே பொய் போட்டு செய்துகொள்கிறோம்...
இதற்கு  நமது மூளையையும் தண்டுவடத்தையும் இணைக்கும் BRAIN  STEM ன்  MIDBRAIN பாகத்தில்  இருந்து நமது உணர்வுகளுக்கு காரணமான LIMBIC சிஸ்டம் வரை வியாபித்திருக்கும் DOPAMINERGIC REWARD SYSTEM ..காரணம் 
அடிப்படையில் இந்த பகுதி தூண்டலின் பொது நாம் வெகுமதி  (REWARD ) கிடைத்த பாவனைக்குள்ளாகிறோம்... திரும்ப் திரும்ப இதனையே தூண்டப்பட்டு அதன் மூலம் ஒரு உணர்வு வலுவூட்டல் (REINFORCEMENT ) நிலைக்கு உட்படுகிறோம் 
நாம் குடிக்கும் போதும்..காதல் வயப்படும்போதும், கலவி நிலையின் போதும் ,இனைய மற்றும் சமூக வலைத்தளங்கள் உபயோகிக்கும் போதும்  மூளையின் இதே பகுதி தூண்ட படுவதே ...ஒரு நிலைக்கு பிறகு அடிமை( ADDICTION ) நிலைக்கு காரணம்.
கள்ளும் போதை தரும் ...கஞ்சாவும்  போதை தரும் ,,இரண்டும் ஒரு சேர மூளையை தாக்கினால் என்ன நடக்கும்...அதே போல தான் ...இணையமும் ..அதன் மூலம் காதல் கத்தரிக்காய் களும்..இவை அனைத்தும் சேர்ந்து நமக்கு ஒரு பொய்யான உணர்வு ஊட்டலையே கொடுக்கும்...
இந்த இணைய மற்றும்  சமூக வலைதளங்களின் வரம்பு தாண்டிய உபயோகத்தின் போது  உண்டாகும் சில மனநல பாதிப்புகள்  கீழே .....
1]Social Media Anxiety Disorder-
                                    # இது  ANXIETY NEUROSIS , என்ற பொதுவான மனப்பதற்ற வியாதியுடன்  தொடர்புடையது ,,                                                                           # நீங்கள் ஒரு குழுவில் இருக்கும் போதும் , குழுவுக்கு தொடர்பிலாத உங்கள் FACEBOOK /                                           TWITTER  ...நிலைதகவல்களை  பகிர்ந்து கொள்வது 
                                     # உங்கள் முக்கிய குடும்ப / சமூக நிகழ்வுகளின் போதும் அடிக்கடி உங்கள் மொபைல் இல்                                                     ..STATUS பார்ப்பது.
                                      #உங்கள் நிலைதகவல்களில்  COMMENT களை  பற்றிய அதீத பயம் ,
                                     # உங்கள்  FACEBOOK / TWITTER  ACCOUNT களில் நண்பர்கள் எண்ணிகையை கூடுவது ..                                     
                                    முகம் தெரியாத நபர்களுக்கும் FRIEND REQUEST  கொடுப்பது                                      
                                    தோரயமாக ஒரு நாளைக்கு 6-8 மணி நேரம் சோசியல் மீடியா வில் செலவிடுவது ..
2] Nomophobia ...
                           நோ-மொபைல் -போபியா --- உங்கள் மொபைல்  COVERAGE தவற விட்டு விடுவோமோ என்ற மன பயம் மற்றும் பதற்றம் ..உங்கள் கணவரோ மனைவியோ நீங்கள் அழைத்தும் போன் எடுக்க வில்லை என்ரால் பதற்றமடைவது ,, BATTERY  தீர்ந்து விடுமோ என்று பயமடைவது,, போன் SWITCH OFF ஆனால் பதற்றமடைவது..உங்கள் போன் தொடர்பை விட்டு விடுவோமோ என்ற என்ன சுழற்சி --அதனை தொடர்ந்த FREQUENT  சரிபார்த்தல்  ..
3] OBSESSIVE -COMPULSIVE SOCIAL MEDIA DISORDER ---
                                    *தெருவில் போகும் முன் பின்  முகம்  தெரியாதவர் களை  அழைத்து LIKE பண்ண சொல்வீர்களா ,, இந்த OCSD இல் இதை சமூக வலை தளங்கள் மூலம்  செய்ய தோன்றும் , தேவையே இல்லாமல் அனைவருக்கும் போட்டோ/ STATUS TAG  செய்வது ..
                                     *STATUS  ADDICTION ...### BREAKING  NEWS  மாதிரி ஓயாமல் STATUS  PODUVATHU ..இருக்கும் இடம் தீ பிடித்தல் கூட அதனை அப்டேட் செய்வது ..LATEST  DELHI  ZOO புலி மேட்டர் மாதிரி ,, தவிர்க்க முடியாத தவிப்பையும், STATUS  அப்டேட் இக்கு பின் நிம்மதி அடைவது,, லேட்டஸ்ட் SELFIE ADDICTION   வரை இதில் சேர்த்தி..
                                    *எந்த சோசியல் நெட்வொர்கிங் வலை தளங்கள் வந்தாலும் முந்தி கொண்டு இடம் பிடிப்பது ...ID  & PASSWORD  க்கு பிட் எழுதும் அளவிற்கு..
                                    * உங்கள் பழைய /புதிய ---காதலன்/ காதலியுடன் உண்மையாக BREAKUP  ஆகும் போதோ , அவர்கள் UNFRIEND பண்ணும் போதோ , கேட்கவே வேண்டாம் ...அக்கௌன்ட் DEACTIVATE  செய்வது / FAKE  அக்கௌன்ட்  உண்டு பண்ணி உங்கள் EX  என்ன செய்கிறார்கள் என்று ONLINE  லேயே தவம் கிடப்பது ..
                                  * சமூக வலைதள குழுமங்களுக்கு இடையே கூட்டம் நடத்துவது  ,, மற்றும் ஆளே இல்லாத பேட்டைக்கு தாதா வாக  ஆவது ..
4]..ONLINE EXTRA  MARITAL AFFAIR :---  
                                இது மண  வாழ்கையில் சரியான புரிதல் இல்லை என்பதாலும் , எந்திரமயமான வாழ்வு முறையினாலும் வருவது...                                             
# முன் /பின் தெரியாத நட்பு...தெரிந்த நட்பே என்றாலும் மறறவர் அறியாமல்  நடக்கும் உணர்வு ரீதியான....உளவியல் ரீதியான CHATING  மற்றும் மற்ற பரிமாற்றங்களில் இது நடக்கும் 
இங்கு  உடலுறவுக்கு இடமில்லை என்றாலும் இந்த உளவியல் ஏமாற்று தனத்தில்..உடல் தொடர்பில் நடக்கும் அத்தனை வேதியல் மாற்றங்களும்  மூளையில் நடக்கும் ...பின்பு இதுவே எண்ண சுழற்சி உண்டுபண்ணி ...உண்மையான தொடர்புக்கு வழி வகுக்கும் ...இதனை  இயல்பாக நடக்கும் காதல்களுக்கு எடுத்து கொள்ள வேண்டாம் ...
5] INTIMACY STAGE  OF LOVE ..(
          இது காதலின் முக்கூட்டு நிலைகளில் ஒன்று.. நெருக்கம் ...நட்பூ ..காதலாக கனியும் போது அங்கு மூளையில் நடப்பது ..விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் முன், மூளையின் DOPAMINERGIC  REWARD SYSTEM இருக்கும் VTA மற்றும் NUCLEUS ACCUMBENS பாகங்களில் நடக்கும் வேதியல் மாறாட்டம் தான் ...இதே பாகங்கள் தான் கொகைன் போன்ற போதை உட்கொள்ளும் போதும் தூண்டப்படும்  ...          இயல்பாக DOPAMINE வேதி கூறு  அதிகரிக்கும் பொது செரோடோநின்(SEROTONINE )மற்றொரு வேதிகூறின்  குறைவினால்   ஒரு தற்காலிக என்ன சுழற்சி நிலை{OBSSESSION ] ஏற்படும்...இதனால் தான் உங்கள் காதலனோ ,காதலியோ இல்லாதபோதும்..அவர்களின் நினைவுகள் உங்களை சுழற்றி வாட்டும் 
.. ... இது இன்டர்நெட் காதலுக்கும் மட்டும் அல்ல உங்கள் அணைத்து நல்ல...கள்ள காதலுக்கும் பின்னே நடக்கும் உயிர் வேதியியல்  களியாட்டம் ...
பின் குறிப்பு :-- இதில் ஒன்று முதல் மூன்று வரை உள்ள பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தால் மனநல                                                                மருத்துவரை அணுகவும் ..                                                     
                         நான்காவது பிரச்சினை உங்களுக்கு இருந்தால் உளவியல் மற்றும் திருமண ஆலோசகர்களை                                                         அணுகவும் ...                                                     
                      ஐந்தாவது   பிரச்சினைக்கு...அது ஒரு  பிரச்சினையாப்பா  ....பூங்கொத்து  எடுத்து கொண்டு உங்கள்                            
                        காதலுக்கு உரிய வரை  பார்க்க செல்லுங்கள்....
                      காதலை நேரில் சொல்லுங்கள் FACEBOOK ல்  அல்ல 
(MIND வாய்ஸ் ...யப்பா மனநலம் சார்ந்த ஒரு STATUS  போட்டாச்சு) ...
(உங்கள் MIND  VOICE ...ஆமா இப்படி வளவளன்னு ஒரே STATUS  ஆ  விடுறியே இது என்ன பிரச்சினைப்ப...?)
---------------------------------------------------------------------  DR.ம.ஸ்ரீதர் ,மனநரம்பியல் மருத்துவர் ,                                                                                                                                                       ஆத்மா மனநல மற்றும் ஆராய்ச்சி நிலையம் ,                                                                                                                                                         திருச்சி